முகப்பு...

Monday 20 June 2011

முரண்பாடு

இங்கு...
அழும் குழந்தைக்கு பால் புகட்ட 
முடியாத நிலையில் ஏழைத்தாய்...

அங்கு...
இறைவனுக்கு 
பாலாபிஷேகம்...?!

இங்கு...
ஒரு வாய் சோறு இல்லாமல்
தெருவோர பிச்சைக்காரன்...

அங்கு...
இறைவனுக்கு அன்னாபிஷேகம்...?!

இங்கு...
தன் வாலிபத்தின் மானத்தை மறைக்க
வழியற்று சாலையோர பெண்.

அங்கு...
இறைவிக்கு பட்டுப் புடவையலங்காரம்..?!   

இங்கு... 
தாலி கூட வாங்க முடியாமல்
திருமண ஏக்கத்தில் முதிர் கன்னி...

அங்கு...
இறைவனுக்கும், இறைவிக்கும் 
ஆண்டுதோறும் திருமண வைபவம்...?!
இங்கு... 
மழைக்குக் கூட ஒதுங்க இடமில்லாமல்
ஏழை மக்கள்...

அங்கு,
இறைவனுக்கு கோடியில் கும்பாபிஷேகம்...

இங்கு,
நடக்க முடியாதவன் சக்கர நாற்காலி
வாங்க கூட வழியில்லாத எளியவன்...

அங்கு,
இறைவனுக்கு தங்கத்தேர்..

அபிஷேகம் செய்த பொருள், பிரசாதம்
என்ற பெயரில், சக மனிதனுக்கு கிடைக்க வேண்டிய
உணவுப்பொருட்களை வீணடிக்கும் 
சமூகம்.....

பக்தியையும், மூட நம்பிக்கையையும்
குழப்பிக்கொள்ளும் மனிதர்கள்..

இத்துணை முரண்பாடுகளையும் ஏற்படுத்தியது
கடவுளா? மனிதனா?





மனிதன் செய்யும் தவறுக்கு,
மனிதனிடம் வராத கோவம்...
கடவுளிடம் வருவது ஏன்..?

10 comments:

  1. வணக்கம். மனித நேயம் பேசும் இந்த வரிகள் நம்மிடையே இல்லாமல் போன, இருக்க வேண்டிய உயர்ந்தப் பண்பை பறைசாற்றுகிறது. கடவுளின் பெயரால் மனிதன் செய்யும் தவறுகளில் ஒன்று உணவுப் பொருள் வீணாக்குவது. உண்மையில் இது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று. மேலும் இது போல் சமூக சிந்தனைகளை தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தங்களைப் போன்ற கவிஞரின் கருத்துக்களும், ஆதரவும் தொடர்ந்து கிடைக்க வேண்டுகிறேன்...நன்றி....

    ReplyDelete
  3. இப்படி ஒரு கவிதை ...... நல்லா இருக்கு ..... வாழ்த்துக்கள் ............

    ReplyDelete
  4. அருமை என் இனிய சகோதரி !!! மெச்சுகிறேன் உன் திறமையை !!!! வணங்குகிறேன் உன் வடிவங்களை !!
    தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழ்த்திடுவோம் என்றான் பாரதி !!! முட்டாள்கள் இருக்கும் வரை மூடநம்பிக்கை மட்டுமே அரசாளும். உடைக்க படவேண்டியது சிலை அல்ல இவர்களின் மனநிலை மட்டுமே !!! சமுதாய மாற்றம் காண உன் போன்றோர் வீறு கொண்டு எழாத வரையில் !!! சில மதங்களும் ஜாதிகளும் என்றுமே ஒதுக்க பட்டவைதான் !!! நீ கொடுத்திருப்பது ஒரு சாட்டை அடி !!! தொடரட்டும் உன் சர வெடி !!!!

    ReplyDelete
  5. நன்றி ஸ்வீடஸ்...

    ReplyDelete
  6. நன்றி திரு சங்கர்..தங்களுடைய ஆதரவும், ஆலோசனையும் தொடர்ந்து அளிக்க வேண்டும்..

    ReplyDelete
  7. சமூகத்தின் பேரிலும், மனித நலத்திலும் தாங்கள் கொண்டுள்ள ஈடுபாடு மெய்சிலிர்க்க வைக்கின்றது. முரண்பாடுகளை களைய ஒரு படி முன்னேறுங்கள். முயன்று பாருங்கள் நிச்சயம் முடியும். வெற்றி நிச்சயம்

    ReplyDelete
  8. நாம் அனைவரும் இணைந்து முயற்சி செய்வோம் பாலா..பாராட்டுக்கு நன்றி...

    ReplyDelete
  9. கல்லுக்கு பட்டு துணி கட்டுறவங்க
    தன் தட்டுக்கு சோறு வேணும்னு
    வானத்தை பாப்பாங்க
    .......
    முரண்பாடு

    ReplyDelete
  10. நல்ல சிந்தனை தம்பி.கலை..மூடப் பழக்கங்களில் ஊறிப்போன மக்கள்..

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__