முகப்பு...

Tuesday 12 February 2013

காயங்கள்..!!!

பற்றைவிட வரவே
அதிகம் காட்டும்
காலம் கொடுத்த காயங்களில்...

வரவே உறவென நினைத்து
வாழ்க்கையின் சுவைபுரியாதோரால் காயங்கள்..

தன்னலம் கருதி
பிறர்நலம் விரும்பா
பேதமையினால் காயங்கள்..

மனிதனென்ற போர்வையில்
மனிதமற்றவர்களால் காயங்கள்..

மனதின் மனம் அறியா மனதினால்
காயங்கள்...

காயமுண்டாக்கியவரிடம்
காயத்தின் ஆழம் விவரிக்க
குணமாகும் காயங்கள்..

காயப்படுத்தியவரே காயத்திற்கு
மருந்தாகும் காயங்கள்..

காயப்படுத்தியவரை காயப்படுத்த
குணமாகும் காயங்கள்..

காயப்படுத்தியவரை புறம்பேச
குணமாகும் காயங்கள்..

காயமுண்டாக்கியவரிடம் விலகிநிற்க
குணமாகும் காயங்கள்..

மனம்பிடித்தவரிடம் மனம்பகிர்வதால்
குணமாகும் காயங்கள்..

காயத்தை மற(றுத்)ந்து
அலட்சியப்படுத்த குணமாகும் காயங்கள்..

பேசாமல் விட குணமாகும் காயங்கள்
பேசித்தீர்க்க குணமாகும் காயங்கள்..

காயங்களால்.,
விதிவரைந்த வேதனைக்கோடுகளை
மதிகொண்டழிக்கும் முயற்சிகளைத்
தொடரும் மானிடவாழ்க்கை...!!



8 comments:

  1. ஆற வைக்கும் சக்தி காலத்திற்கு உண்டு...

    ReplyDelete
  2. அருமையான கவிதை! காயங்கள் தன்மை பொறுத்து ஆறும்! சில ஆறாது! அருமை! நன்றி

    ReplyDelete
  3. மனகாயங்கள் ஆறுமோ?மனிதமும் வாழுமோ?

    ReplyDelete
    Replies
    1. மனிதத்தை எதிர்பார்த்தே மனிதனின் வாழ்வும் கழிகிறது..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__