முகப்பு...

Saturday 3 August 2013

தூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 5

எனதன்புத் தோழமைகளுக்கு இதமான வணக்கம்.
காயத்ரி : வணக்கம் விசு சார்...

விசு       : வணக்கம்மா.  என்னம்மா..? என் 2 நாளா வரலை நாளைக்கு சீக்கிரம் அவசியம் வலைச்சரம் வாங்கன்னு என்கிட்ட சொல்லிட்டு நீ இவ்ளோ நேரம் கழிச்சு வர...??

காயத்ரி : இன்னிக்கு ஆடி 18 சார்.  விடுமுறை.. வீட்ல இருக்கிறவங்கள எல்லாம் கவனிச்சுட்டுதான வரமுடியும் அதான் லேட்டா ஆச்சு...

விசு        : இன்னிக்கு 6வது நாளின் 5வது அறிமுகமா..?

காயத்ரி : அட..!! சார் தெளிவாத்தான் இருக்கீங்க.. (ஆமா நீங்கவந்தபிறகு நாங்கதான குழம்புவோம்..மறந்துட்டேன்)

விசு       ; எப்படிம்மா மறப்பேன்..மூன்றாவது நாள்ள 2வது நாள்னு சொல்லி ஒரு நொடி என்ன குழப்பினியே..அதன்பிறகும் தெளியலேன்னா எப்படிம்மா...??

காயத்ரி : உங்ககூட இவ்வளவு நாள் பேசி ஒரு நொடிகூட குழப்பலன்ன என்ன சார்..?? விடுங்க விடுங்க.  தூரிகை கண்டெடுக்கும் முத்துக்களை இன்னிக்கும் வலைச்சரத்துல நீங்கதான் அறிமுகப்படுத்தனும் .  ஏற்கனவே 2 நாள் சூட்டிங்னு வரல ..  நம்ம வலைச்சரத்து மலர்கள் உங்களைக் காணாம ஏமாந்துட்டாங்களாம். ஏதோ எனக்குத் தெரிந்த அளவு சமாளிச்சேன்..இருந்தாலும் உங்களமாதிரி ஆகுமா சார்...??! 

விசு       : ஏம்மா இன்னிக்கும் என்ன கூப்பிடற...??  பாவம் அவங்க கொஞ்சமாச்சும் அமைதியா இருக்கட்டுமே..!!

காயத்ரி :  அதெல்லாம் ஒன்னும் நினைக்கமாட்டாங்க சார்..உங்களப்பிடிக்காதவங்க இருக்குமா என்ன..(இன்னும் 2 நாள்தான அப்புறம் நிம்மதியா இருக்கட்டுமே..:)

விசு       : நீ இன்றைய பதிவர்களைப் பற்றி தயாரா வச்சிருக்கியா... ? சூட்டிங்கல இருந்து பாதில வந்திருக்கேன்.. முதல்ல யாரை அறிமுகப்படுத்தனும்..?

காயத்ரி : ஒரு வித்தியாசமான வலைப்பூ சார்...அங்க போனா ஒரு பள்ளிக்கு சென்றமாதிரி இருக்கும்.

விசு       : அப்படியா..எனக்கு ஏதும் பாடம் எடுத்து படிக்க சொல்லமாட்டாங்களே..முதல்ல விவரம் கொடும்மா. என்ன வம்புல மாட்டி விட்டுடாத.. 

காயத்ரி : அப்படியெல்லாம் ஆகாது சார்.. இதான் சார் அவர் பற்றிய விவரம். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த திரு.கான் அவர்கள் தாமறிந்த கணினி அனுபவம் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கியிருக்கும் தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்.. வலைப்பூவில் கணினியில் கோரல்ட்ராபோட்டோசாப் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தும் முறைபற்றி விவரமாக குறிப்பிட்டுள்ளார்.   அவற்றில் சில..நம் வலைச்சரத்தையும் அலங்கரிக்கட்டுமே.. கோரல் ட்ரா அறிமுகம்  நீங்களும் கோரல் ட்ரா தெரிந்துகொள்ளலாம்..போட்டோஷாப் பாடங்கள் போட்டோஷாப்பின் பாடங்கள் அனைத்தும் இங்கு பகிரப்பட்டுள்ளன.  கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த தளம் ஒரு வரம்.
விசு   : தான் அறிந்ததை  மற்றவர்களுக்கும் உபயோகப்படும் வகையில் தளத்தை அமைத்திருக்கும் தோழர் கானுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.  தங்களது இந்தச் சேவை தொடர்ந்து நடைபெற வேண்டுகிறேன்.

விசு       :  ரொம்ப நல்ல பயனுள்ள வலைத்தளம்மா.. அடுத்து யாரும்மா..??

காயத்ரி :  அடுத்தது திரு.விஷ்ணு அவர்களின் என் எழுத்தோவியம் என்ற வலைப்பூ சார்.  இங்க போனா பாத்துக்கிட்டே இருக்கவேண்டும் என்பதுபோல் தன் வலைப்பூவை அழகா அலங்கரிச்சதோட இல்லாமல் தன் அன்பு வார்த்தைகளினால் கவிதையினைப் பகிர்ந்திருக்கிறார். போய்ப் பார்த்துவிட்டு அவரை அறிமுகப்படுத்துங்க..

குவைத்தில் பொறியாளராக வேலைப்பார்க்கும் எளிமையும்அன்பும் உடைய நண்பர் விஷ்ணு   கவிதைபுகைப்படம் மற்றும் ஓவியம் இவைகள் அனைத்தும் படைக்கவும் பார்க்கவும் படிக்கவும் விருப்பமுடைய  இவர் தன்னுடைய  என் எழுத்தோவியங்கள்..   நிஜமாகும் நிழல்கள்.. போன்ற வலைப்பூக்களை தன் திறமையினால் அலங்கரித்து அசத்தியிருக்கிறார்.  எனது எண்ணங்கள்...
//ஆசைகள் எளிதாக கிடைக்கும்
சேர்க்காதே ... 
அதிகம் சேர்ந்துவிட்டால் 
செலவழிப்பது கடினம் ...
உன்னையே அழித்துவிடும் ...// மற்றும் ஊமை  என் கடிதம்என் கவிதைஎன் காதல்என் வருத்தம் என தன் அன்பையும்உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். 

விசு        : நீ கூறியதுபோலவே மிக அழகான வடிவமைப்பு.. அன்புவார்த்தைகள்னு சொன்னியே நிஜம்மா..இந்த காலத்துக்கு  அனைவரிடத்தும் அவசியம் இருக்கவேண்டியதும்மா. தோழர் விஷ்ணுவிற்கு  மனம்கனிந்த வாழ்த்துக்கள்.  தொடரட்டும் தங்கள் அன்புப்பகிர்வு. சரிம்மா அடுத்து நீ அறிமுகப்படுத்து.... நான் நீ மற்ற தளங்களைப் பார்வையிட்டு வரேன்மா..

காயத்ரி : சரி சார்...படிச்சிட்டு அப்படியே தூங்கிடாதீங்க..மற்றவர்களுக்கு கருத்திட்டு ஊக்கப்படுத்துங்க.. அறிமுகத்தின் நிறைவில் உங்க பாணில ஏதாவது ஒன்னு சொல்லிட்டுபோங்க( நான் அதுக்கு கவிதைன்னு பேர் வச்சிக்கிறேன்..)

ஷைலஜா அவர்களின் http://shylajan.blogspot.com/  நிகழ்வுகள்ஆண்டாள் எனும் பிரிவில் ஆண்டாள் பெருமாள் மீது கொண்ட காதலை அழகாக படத்துடன் பகிர்ந்துள்ளார்.  சிறுகதையான ஆராதனா..வில் அனைவரும் சிந்திக்கும் விதமாக திருநங்கைக்கு கிட்டும் அவமரியாதைப்பற்றிக் கூறியுள்ளார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை இக்கதையில் எடுத்துக்காட்டியுள்ளார்.  திருநங்கையான ஆராதனா  வீட்டை விட்டு வெளியேறக் காரணமாயிருந்த பூஜாவிற்குக் காத்திருக்கும் அதிர்ச்சிதான்  என்ன...சென்று ஆராதனாவைப் படிப்போமா..?//ஆராதனாவும் இல்ல அவரோஹனாவும் இல்ல..நான் பூஜா ,உங்க தர்ம பத்தினி” என்று கிண்டலாய் எதிர்முனையில்குரல்வரவும் திவாகர் ஏமாற்றமுடன்,”நீயா?// ஷைலஜாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் எழுத்துப்பணி என்றும் தொடர்ந்து வலைப்பூவிற்கு மணமூட்டட்டும்.

அமுதா முருகேசன் அவர்களின் மனசு.. இவற்றில் உணர்வுகள்கட்டுரைகவிதை எனப்பகிர்ந்துள்ளார். கவிதையில் உங்களுக்கு எப்போதும் பெண்வேண்டுமா..? உணர்ச்சிக்கொந்தளிப்பில் பொங்கியிருப்பது சற்று சிந்திக்கவும் வைக்கிறது.  உணர்வுகளில் அப்பாவிற்குப்பின்.... 

//அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு...........
அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்!// இன்னும் இவர் அப்பா பற்றி என்ன கூறியிருக்கிறார் அவரது மனசில் இருக்கும் மற்ற பதிவுகளையும் கண்டு உணர்வோம்.

காயத்ரி : விசு சார்...படிச்சிட்டீங்களா..வாங்க உங்க வார்த்தைகளை அள்ளி வீசுங்க..

விசு    : நீ விடற மாதிரி இல்லியா..
கற்பிக்கப்பட்டதை
கற்பிக்கப்பட்டவாறே 
கற்றோமா..??
கற்றது 
கற்பிக்கப்பட்டதுதானா..
கற்றுக்கொள்ளப்பட வேண்டியதுதானா..?
கற்பிக்கப்படாததைக் கற்றாலும் 
கற்றது 
கற்க வேண்டியதுதானா..?
கற்கவேண்டியது 
கற்பிக்கப்பட்டாலும்
கற்கப்பட்டதா..?
கற்றது 
கற்பிக்கப்பட்டவாறே 
கற்கப்பட்டதா..?
கற்றது 
கற்றவாறே கடைபிடிக்கப்படுகிறதா..?
கற்பிப்பவர்கள் 
கற்றுக்கொடுத்துக்கொண்டேயிருக்க
கற்பவர்கள் 
கற்றும் கல்லாமலும்
கற்றதை உணர்ந்தும், உணர்ந்ததை உணர மறுத்தும்..
கற்பதும், கற்பிக்கப்படுவதும் தொடர்கிறது.. 
கற்றலின் தன்மை விளங்காமலேயே..!! 

காயத்ரி: மிக்க மகிழ்ச்சி சார்...ஏதோ நீங்க இப்படி ஒரு பதிவு போட்டு நம்ம தூரிகையில் வருகைதரும் மலர்கள் மட்டுமின்றி வலைச்சரத்தில் பூத்திருக்கும் மலர்களும் குழம்புவதில் ஒரு சந்தோசம்..சரி சார் நாளை சந்திப்போம். நன்றி சார்

விசு      : நாளைக்குமா..? பாவம்மா நானு..உன்மேல உள்ள கோவத்துல என்ன எதுவும் செய்திடமாட்டாங்களே..??

காயத்ரி  : சே சே அப்படியெல்லாம் இல்ல சார்..நம்ம வலைச்சர நண்பர்கள் மனம் பூப்போன்றது...எவ்வளவு நீங்க குழப்பினாலும் தெளிவா இருப்பாங்க..கவலையே படாதீங்க

விசு        : என்னமோம்மா நீ கொடுக்கும் தைரியத்துல வரேன்..நல்லது சந்திப்போம்.  அறிமுகமாகும் நண்பர்களுக்குஅனைவரும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து படைப்பாளிகளின் எழுத்துக்கள் எண்ணற்று வெளிவர தொடர்ந்து உடன் இருப்போம் தோழமைகளே.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_
வாழ்க வளமுடன்... J

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__