முகப்பு...

Monday 5 August 2013

பொய் பயிர்...!!

எங்கோ
யாராலோ
அவரவருக்கான 
பொய்கள் 
அறுவடைக்கான நேரம் 
அறிவிக்கப்ப(டுத்தப்ப)டாமல்
விதைக்கப்படுகிறது..

விளைச்சல்
வீடு வர மகசூல் கண்டு
விதைக்கப்பட்ட
பொய்விதையின் தரம் நினைத்து
மகிழ்வதில்லை - மனம்
உணர்ச்சிப்போராட்டத்தின்
உச்சத்தில்
கொந்தளிப்பே எச்சமாய்......!!

6 comments:

  1. //போராட்டத்தின் உச்சத்தில்
    கொந்தளிப்பே எச்சமாய்!..
    குமுறல்களே மிச்சமாய்!..//

    நல்ல கருத்துடைய கவிதை!.. வாழ்க!...

    ReplyDelete
  2. நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (ஒரு நாள் தாமதமாக)

    தங்கள் அனுமதியின்றி ஒரு தொடர்பதிவுக்கான அழைப்பு... எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்....


    http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_5.html

    ReplyDelete
    Replies
    1. தம்பிக்கும் எமது மனமார்ந்த வாழ்த்து...என்ன அழைப்பு..??!! ஏதாவது சிக்கல்ல சிக்கவைக்கப்போறியா..?

      Delete
  3. விதைக்கப்பட்ட
    பொய்விதையின் தரம் நினைத்து
    மகிழ்வதில்லை

    --------

    அருமை அக்கா....
    கவிதைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பொய்ப் பயிரைப் புதைக்கப் பிறக்குமோ
    மெய்ப் பொருளாய் மலிந்து!

    மிக அருமையான சிந்தனைச் சிதறல்!
    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.2

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__